Tuesday, October 11, 2011

Short cut in Tweeter


ட்விட்டரில் மொக்கை போடும் வேகத்தை இன்னும் விரைவாக்க சில சுருக்கு வழிகளை இங்கு பகிர்கிறேன்.

நேரக்கோட்டின் (Time Line)

மத்தியிலோ, கீழோ இருக்கும் போது மேலே செல்லவும், புதிப்பிக்கவும் முற்றுப்புள்ளி (Full Stop) ” . “ பயன்படுத்தலாம்.

பக்கத்தின் கீழே செல்ல ” SPACE BAR “ பயன்படுத்தலாம்.

ட்விட்டரில் தேட ” / “ இந்தக் குறியைப் பயன்படுத்தலாம்.



ஒரு ட்விட்டைப் படித்துக்கொண்டிருக்கும் போது, அதை

மீள் ட்வீட் செய்ய ” t “ அழுத்தலாம்

பதிலளிக்க ” r “ அழுத்தலாம்

பிடித்தமானதாகத் தேர்ந்தெடுக்க ” f “ அழுத்தலாம்

அந்த ட்வீட்டின் கூடுதல் தகவல்களைப் பெற ” ENTER “ விசையை அழுத்தலாம்.



நேரக் கோட்டின்

முகப்புப் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” h “

உங்களுக்கு வந்த பதில்கள் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” r “

உங்கள் சுயவிவரப் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” p “

நீங்கள் விரும்பிய ட்வீட்களின் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” f “

செய்தி அல்லது தகவலை

அனுப்ப ” m”

செய்தி அல்லது தகவல் பக்கத்திற்குச் செல்ல

 ” g ” பிறகு ” m “

No comments:

Post a Comment